கேரளாவில் இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் மட்டும் 11,755 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,77,855 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மொத்த எண்ணிக்கை 95,918 ஆக இருக்கின்றது.இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து,தற்போதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 978 ஆக உயர்ந்துள்ளது.
அதனைப் போலவே கேரள மாநிலத்தில் தற்போது வரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் மட்டும் 7,570 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1,82,874 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயத்தில் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கோழி காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்று மட்டும் ஆயிரத்திற்கு மேல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.