கேரளாவில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் இன்று மட்டும் 4,138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,44,000 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3,55,000 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை கேரள சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.