தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது.
இந்நிலையில் கேரள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மார்க்சிஸ்ட் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. ஜனநாயக முன்னணி -82, ஐக்கிய ஜனநாயக முன்னணி- 56, பாஜக- 1, இதர கட்சிகள் 1 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.