கேரள மாநிலம் பத்தினம் திட்டாம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தர்மபுரியை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண்ணின் உடல் பாகங்கள் சமீபத்தில் தான் அவருடைய மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், குடகு பகுதியில் சேர்ந்த பெண் ஒருவர் கொச்சியில் தங்கி உள்ளார். இவர் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.
இது பற்றி அவர் அந்த பகுதி சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். அவர் மந்திரவாதி ஒருவர் இருப்பதாகவும் அவரை சந்தித்து பேசினால் பிரச்சனை தீர்வு எனவும் கூறினார். இதற்கு அந்த பெண்ணும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து மந்திரவாதியிடம் அந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு பூஜை நடத்தினாலும் பிரச்சனை சரியாகும் என்று கூறியுள்ளார். இதற்காக பூஜை ஏற்பாடுகள் நடத்திய போது மந்திரவாதியும் பெண்ணின் நண்பரும் ரகசியமாக பேசிக் கொண்டிருந்தனர்.
இதை அந்த பெண் ஒட்டு கேட்டபோது அவர்கள் பெண்ணை அரிவாளால் வெட்டி நரபலி கொடுக்க திட்டமிட்டது தெரிய வந்ததால் உடனே அங்கிருந்து அந்த பெண் தப்பி ஓடியுள்ளார். பின்னர் உறவினர்களிடம் கூறி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் நிலையில் பெண்ணை நரபலி சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.