நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, சில தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் வருகின்ற ஜூன் 16-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து சேவையை கேரள அரசை மீண்டும் தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக நீண்ட தூர பயணங்களுக்காக பேருந்து இயக்கப்படுகிறது. தொடர்ந்து படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படும் என்று அம்மாநில போக்குவரத்து அமைச்சர் ஆண்டனிராஜ் தெரிவித்துள்ளார்.