கேரளாவில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற போது ஹெல்மெட் அணியாத முதியவரை உதவி ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கியதற்கு கண்டனம் வலுத்துள்ளது.
கொல்லம் மாவட்டம் சத்தியமங்கலம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு பேரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ராமநந்தன் என்ற முதியவர் தான் வாகனத்தை ஓட்டாத போது ஏன் அபராதம் செலுத்த வேண்டும் என்று உதவி ஆய்வாளர் சஜிமிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த சஜீம் முதியவரை கன்னத்தில் அறைந்ததுடன் தரதரவென இழுத்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி உள்ளார்.
உதவி ஆய்வாளர் சஜிமீன் அத்துமீறல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து பாலரும் கேரள காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து உதவி ஆய்வாளர் சஜிம்மை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கொல்லம் புறநகர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்