Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 10 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி…. பெரும் அதிர்ச்சி….!!!!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடந்த 1947ம் ஆண்டு கொசுக்களால் பரவும் வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. முதலில் குரங்குகளிடம் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு பிறகு மனிதர்களிடம் கண்டறியப்பட்டது. தலைவலி, முதுகுவலி, உடல் சோர்வு மற்றும் கண் சிவத்தல் போன்றவை இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள். இந்த வைரஸ் தற்போது கேரளாவில் பரவ தொடங்கியுள்ளது. முதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கேரளாவில் 10 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 10 பேருமே திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள். சிக்கன் குனியா,டெங்கு போன்ற நோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் தான் இந்த வைரஸ் பரவுவதாக கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |