Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் மத்திய பகுதியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

அதன்படி இடுக்கியில் உள்ள சிறுதோணி அணை முழு கொள்ளளவை நெருங்கியதால், அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் தெற்குப் பகுதியில் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. சில இடங்களில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

Categories

Tech |