கேரளாவில் மீண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபரியில் பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேற்று பிற்பகலுக்குப் பிறகு சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், எர்ணாகுளம் , இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்திற்கும் மஞ்சள் எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது . கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக கோழிக்கோடு மாவட்டத்திற்கு வந்த ஐந்து விமானங்கள் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.