Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்றபோது…. “19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்”.… டிரைவர் கைது… தலைமறைவான உரிமையாளர்கள்…. போலீசார் வலைவீச்சு…!!

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்திச் சென்ற 19 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்போவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாரத நேரு, காவல்துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள்.

அப்போது அவர்கள் காலை 6 மணிக்கு பாலக்காடு ரோடு நல்லூர் வனத்துறை சோதனை சாவடி அருகில் வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அந்த லாரியில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து காவல்துறையினர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியபோது ,அவர் மதுரை பகுதியை சேர்ந்த 38 வயதான அழகு என்பது தெரியவந்தது.

அப்போது அந்த ஓட்டுநர் முன்னும் பின்னும் முரணாக பதிலளித்ததை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லாரியில் இருந்த அரிசி மூட்டையை பிரித்து பார்த்த போது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. இந்த அரிசியை சிவகங்கையில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து லாரியுடன் 19 டன் ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதன்பின் லாரி ஓட்டுனர் அழகுவை கைது செய்துள்ளனர். மேலும் இதனை அறிந்த லாரி உரிமையாளர் கோபால், சிவகங்கை பகுதியை சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் முருகன் ஆகியோர் தலைமறைவாகி உள்ளார்கள். அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |