Categories
மாநில செய்திகள்

கேரளாவுக்கு சிறப்பு ரயில்…. எந்த வழியாக போகுது தெரியுமா?…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்தாண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கொரோனா கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில்வே துறை பொதுமக்களின் நலனுக்காக அடுத்த வாரம் முதல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது. அதே சமயம் முகக்கவசம் அணிந்து பொதுமக்கள் ரயில்களில்  பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து பீகார் மாநிலம் கான்பூரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு சேலம் வழியாக் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மதியம் 1:30 மணிக்கு கான்பூரில் புறப்படும் இந்த ரயில் பாட்னா, துர்காபூர், ராஜமுந்திரி, விஜயவடா, நெல்லூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 7.15 மணிக்கு வந்து சேர்கிறது. 3 நிமிடம் சேலத்தில் நிற்கும் இந்த ரயில் 8.40 மணிக்கு ஈரோடு, 9.25 மணிக்கு திருப்பூர், 10.27மணிக்கு கோவை என மாலை 3.40 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. 5 படுக்கை வசதிகள், 16 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், இரண்டு சரக்கு பெட்டிகள் இந்த ரயில் இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

Categories

Tech |