Categories
தேசிய செய்திகள்

கேரளாவுக்கு ப்ளூ அலர்ட்… இடுக்கி அணையின் நீர்மட்டம் உச்சத்தை அடைந்துள்ளதால் கேரள அரசு முடிவு…!!!

கேரளாவில் தொடர் கனமழை காரணமாக இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனை தொடர்ந்து கேரளாவின் இடுக்கி அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த அணையின் முழு கொள்ளளவு 2403 அடி ஆகும். தற்போதைய நிலையில் நீர்மட்டம் 2390 புள்ளி 86 அடியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |