கேரளாவில் இன்று ஒரே நாளில் 2,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 2,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் கொரோனா பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50,231 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,217 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,611 ஆக இருக்கின்றது. இதுவரை 17,382 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது.