கேரள அரசின் மழைக்கால பம்பர் லாட்டரி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. MA235610 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு முதல் பரிசாக 10 கோடியும் இரண்டாம் பரிசாக 50 லட்சமும் MG456064 என்ற எண் கொண்ட டிக்கெட்டிற்கும் கிடைத்துள்ளது. எர்ணாகுளத்தில் விற்கப்பட்ட டிக்கெட்ற்க்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. அங்கமாலியில் உள்ள சகாய லாட்டரி ஏஜென்சியில் டிக்கெட்டை வாங்கிய நெடும்பாஞ்சேரியில் உள்ள ஏஜென்ட் மூலமாக லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வெற்றியாளர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. டிக்கெட் விலை ரூபாய் 250 மொத்தம் 24,45,740 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. லாட்டரி விற்பனை மூலமாக வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டும் கேரளா அரசு ஓனம், விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் மழைக்காலம் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் பம்பர் டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த வருடம் கேரளா அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசான ரூபாய் 25 கோடி பரிசு தொகையை சாதனை படைத்திருக்கின்றது. இந்த முறை டிக்கெட் விலை 500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை மூலமாக 40 கோடிக்கு மேல் திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்திருக்கின்றது. பல்வேறு பெயர்களில் தினமும் அச்சிடப்படும் லாட்டரிகள் மாநிலத்தில் முழுமையாக விற்பனை செய்யப்படுகிறது. இது சூதாட்டமாக மாறுவதை தடுப்பதற்காக ஒரு நாளைக்கு அச்சடிக்கும் லாட்டரிகளின் எண்ணிக்கையை 1.8 கோடியாக அரசு கட்டுப்படுத்தி இருக்கிறது. மேலும் வரவிருக்கும் ஓனம் பம்பரின் மதிப்பு ரூபாய் 396 மீதமுள்ள ரூபாய் 109 மொத்த செலவில் 28 சதவீதம் ஆகும். இது ஜிஎஸ்டி வரி ஆகும் இது மத்திய அரசிற்கும் மாநில அரசுக்கும் சமமாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.