Categories
தேசிய செய்திகள்

கேரளா, ஆந்திராவில் கட்டணங்கள் உயர்வு…. எதற்கெல்லாம் தெரியுமா?…. வெளியான ஷாக் நியூஸ்……!!!!!

நாடு முழுதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதில் 1 லிட்டர் டீசல் ரூபாய் 101ஐ தாண்டி விட்டது. இதன் காரணமாக அரசு போக்குவரத்து கழகங்களானது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனை ஈடுகட்ட பேருந்து கட்டணங்களை அதிகரிக்க பல மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. கேரள மாநிலத்தில் போக்குவரத்து கழகத்துக்கு ஏற்பட்டஇழப்பு காரணமாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோன்று ஆந்திரா மாநிலத்திலும் போக்குவரத்து கழகம் பெரும் இழப்பை சந்தித்துவந்தது. இதனையடுத்து அங்கு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அரசு முடிவு செய்தது. அந்த வகையில் நேற்று முதல் அங்கு பேருந்து கட்டணம் அதிகரித்துள்ளது.

அந்த அடிப்படையில் கிராமப்புறங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு டவுன் பேருந்துகளில் ஆரம்ப டிக்கெட்டின் விலையானது ரூபாய் 10ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்பின் கிலோ மீட்டருக்கு ஏற்ற வகையில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீலக்ஸ் பேருந்தில் ரூபாய் 5, சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விடவும் ரூபாய் 10 உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற 2019ஆம் வருடம் டீசல் விலை ஆந்திராவில் ரூபாய் 60 ஆக இருந்தது. இப்போது ரூபாய் 100 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பேருந்து டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆந்திரமாநில போக்குவரத்து நிர்வாக இயக்குனர் துவாரக திருமலைராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் பேருந்து டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக திருப்பதியிலிருந்து திருமலைக்கு செல்லும் ஆந்திர மாநில அரசு பேருந்துகளிலும், வேலூர் சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் ஆந்திர அரசு பஸ்களிலும் நேற்று முதல் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேருந்து கட்டண உயர்வை தொடர்ந்து டாக்சி, ஆட்டோ கட்டணங்களும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் ஆந்திராவில் நேற்று முதல் பேருந்து , டாக்சி கட்டணங்கள் அதிகரிக்கப்படுகிறது. இதனிடையில் கேரளாவில் மே 1ஆம் தேதி முதல் அதிகரிக்கிறது. கேரளாவில் பேருந்து, டாக்சி கட்டணங்களை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அங்கு மே 1ஆம் தேதி முதல் கட்டணஉயர்வு நடைமுறைக்கு வருவதாக கேரள மாநில போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜ் தெரிவித்துள்ளார். ஆகவே பேருந்து கட்டண உயர்வுடன் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணமும் உயர்த்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |