Categories
தேசிய செய்திகள் வானிலை

கேரளா: கனமழை எதிரொலி!… 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்…. -வானிலை ஆய்வு மையம்….!!!!

கேரளாவில் சென்ற சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இதனால் அங்கு பதினொரு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது.

இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் தொடர்மழை நீடிக்கும் என்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மூணாறு-வட்டவாடா சாலையில் வாகனங்கள் போக அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

Categories

Tech |