பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி . இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் எப்போதும் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்ததார் . இதன்பின் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் ஷிவானி சிறப்பாக விளையாடி சிங்கப் பெண்ணாக வெளியேறினார் .
Omana Kuty pic.twitter.com/nT1xehEQUo
— Shivani Narayanan (@Shivani_offl) June 5, 2021
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவானி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ஷிவானி கேரள சேலையில் இருக்கும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.