Categories
சினிமா தமிழ் சினிமா

கேரளா தங்கக் கடத்தல் விவகாரம்…. நடிகை பூர்ணாவை மிரட்டிய கும்பல்….!!

தங்க கடத்தலுக்கு நடிகை பூர்ணாவை பயன்படுத்த கும்பல் ஒன்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் நடந்த தங்க கடத்தல் சம்பவம் அந்த மாநில அரசையே ஆட்டம் காண செய்துள்ளது. சொப்னா என்ற பெண்ணை மையமாக வைத்து செயல்பட்டு வந்த இந்த கடத்தல் கும்பலுடன் கேரள மாநில அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளும் ஈடுபட்டு வந்தது இப்போதுதெரிய வந்துள்ளது. கடந்த ஒரு  வருடத்தில் மட்டும் 200 கிலோ தங்கத்தை இந்த கும்பல் கடத்தி இருக்கிறது. கடத்தல் கும்பலின் பெரிய யுக்தி என்பது வெளிநாட்டு நட்சத்திர கலைவிழாவுக்கு செல்லும் சினிமா நட்சத்திரங்களை பயன்படுத்தி அவர்களின் மூலம் தங்க கடத்தலை நடத்துவது தான். இது பலமுறை நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரம் எதும் கிடைக்கவில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடிகை பூர்ணாவை ஒரு கடத்தல் கும்பல் மிரட்டிய சம்பவம் வெளிவந்துள்ளது. பூர்ணா போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கும்பலுக்கும், சொப்னா கும்பலுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சொப்னா கும்பலின் ஒரு யூனிட் தான் பூர்ணாவிடம் பேரம் பேசியிருக்கிறது. அவர் பணியாததால் மிரட்டல் கொடுத்துள்ளது. இது குறித்து பூர்ணாவிடம் விரைவில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும், இந்த வழக்கில் அவர் ஒரு சாட்சியாக சேர்க்கப்படலாம் என்றும் போலீஸ் வட்டார தகவல்கள் அறிவிக்கின்றன.

Categories

Tech |