Categories
தேசிய செய்திகள்

கேரளா தேர்தல் களத்தில்… வரலாறு படைக்கிறார் பினராயி விஜயன்… மீண்டும் ஆட்சியில் கம்யூனிஸ்ட்…!!

கேரள மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.

கேரளா மாநிலத்தில் சரித்திரத்தை மாற்றி எழுதி 5 வருட ஆட்சிக்குப் பின்னர் அதை அரசியல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற போகிறது என்ற ஒரு வரலாற்றை கேரளா படைக்க போகிறது. கேரளாவில் எந்த மூத்த தலைவரும் ஏன் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர்களும் செய்யாத இந்த சாதனையை பினராய் விஜயன் செய்துள்ளார். இந்த தேர்தல் முடிவுகளை பினராய் விஜயன் வெற்றியாக மட்டுமே பார்க்க முடியும்.

கேரள மாநிலத்தில் தொடக்கம் முதலே வாக்கு எண்ணிக்கையில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று வந்த கம்யூனிஸ்ட் கட்சி தற்போது 95 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றது. இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக பினராய் விஜயனுக்கு பல கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |