Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கேரளா நபர்கள் 2 பேர் பிணமாக மீட்பு…. பின்னணி என்ன?… போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகில் பூதனஅள்ளி பெரியகரடு வன ப்பகுதியில் 2 பேர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில், அதியமான்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 2 பேரின் உடல்களிலும் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. அத்துடன் அவர்களின் பாக்கெட்டுகளில் 2 செல்போன்கள், ஆதார் கார்டுகள், ஓட்டுனர் உரிமம், பான்கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டுகள், மலையாள மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றவை இருந்தது.

மேலும் வனப் பகுதியில் கேரளா பதிவுஎண் கொண்ட கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதன்பின் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரியில் இறந்து கிடந்தவர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளாத்துக்காடு பகுதியை சேர்ந்த நிவீல்குருஸ் (58), எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த சிவக்குமார்பாய் (47) என்பது தெரியவந்தது. பின் இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அதியமான்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் கொலை செய்யப்பட்டு வனப்பகுதியில் வீசப்பட்டார்களா..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |