Categories
தேசிய செய்திகள்

கேரளா: புகுந்த வீட்டில் இப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணிருக்காங்க…. தற்கொலை செய்த பெண்…. பெரும் சோகம்…..!!!!

கேரளாவின் திருச்சூரில் குன்னம் குளம் பகுதியில் சுமேஷ் மற்றும் சங்கீதா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். சென்ற 2020 ஆம் வருடம் ஏப்ரலில் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். இவர்களில் சங்கீதா தலித்பிரிவை சேர்ந்தவர் ஆவார். ஆனால் சுமேஷ் ஈழவா பிரிவை சேர்ந்தவர். இதனிடையில் சங்கீதா திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது சங்கீதாவை வரதட்சணைகேட்டு துன்புறுத்தியும், சாதி பாகுபாடு செய்தும் வந்திருக்கின்றனர். இக்கொடுமையை பொறுக்கமுடியாத சங்கீதா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் முடிந்த 2 வாரத்தில் கொச்சியில் வாடகை வீட்டில் வசித்து வந்த சூழ்நிலையில், இந்த கொடுமை ஆரம்பித்துள்ளது என காவல்துறையினர் கூறுகின்றனர். சாதி பாகுபாட்டால் சங்கீதா பயன்படுத்த தனி தட்டு, டம்ளர் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சங்கீதாவின் பெற்றோர் வரதட்சணை கொடுக்கவில்லை. சங்கீதாவை டிவி நிகழ்ச்சியை பார்க்க நாற்காலியில்கூட உட்காரவிடவில்லை. அதன்பின் சுமேஷ் அவரை வீட்டைவிட்டு துரத்திவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சங்கீதா தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக பெண்ணின் கணவர், இவரது தாயார் ரமணி மற்றும் சுமேஷின் உறவினரான மணீஷா என்ற பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |