சென்னையை சேர்ந்த பெண்ணுக்கு கேரள லாட்டரி சீட்டில் பரிசுத்தொகை விழுந்துள்ள செய்தி கேட்டு, அவரது குடும்பத்தினர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சுப்பராவ் பத்மம் என்பவர் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கேரளாவில் உள்ள கோவில்களுக்கு அடிக்கடி புனித யாத்திரை செல்வது வழக்கமாகும். அவ்வாறு சமீபத்தில் அவர் கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது, ஆலுவாவில் உள்ள ஒரு சாலையோர கடையில், கேரள லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.
அதன்பின் அதற்கு நடைபெற்ற குழுக்களில் சுப்பராவ் வாங்கியிருந்த சீட்டானது, இரண்டாவது பரிசாக 25 லட்சம் பரிசு தொகையானது, அவரது பெயரில் விழுந்துள்ளது. இதை அடுத்து இந்த மகிழ்ச்சியான தகவலை சென்னையில் உள்ள சுப்பராவ் குடும்பத்தினரிடம், லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த சுமிஜா தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட அவரது கும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்து, ஓரிரு நாட்களில் ஆலுவா சென்று பரிசு சீட்டை பெற்று கொள்வதாக சுமிஜாவிடம் கூறியுள்ளனர். இவ்வாறு பல ஆண்டுகளாக ஆலுவாவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவரும் சுமிஜா, கடந்த ஆண்டு, தான் விற்பனை செய்த லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசாக 6 கோடி ரூபாய் விழுந்துள்ளது.
மேலும் அந்த சீட்டை வாங்கிய நபர், அதனை சுமிஜாவிடம் கொடுத்து வைத்திருந்த நிலையில், பரிசு விழுந்ததும், சுமிஜா அந்த தகவலை சீட்டு வாங்கியவருக்கு தெரிவித்து, சீட்டையும் ஒப்படைத்த, அவரது நேர்மையை அனைவரும் பாராட்டியுள்ளனர். அதேபோல், தற்போது சுமிஜா,சென்னையை சேர்ந்தவருக்காக 25 லட்சம் ரூபாய் பரிசு விழுந்த தகவலை தெரிவித்து மீண்டும் தனது நேர்மையை நிரூபித்துள்ளார்.