Categories
மாநில செய்திகள்

கேரள அரசுக்கு நன்றி…! சி.எம் ஸ்டாலின் கடிதம் …!!

முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை வலுப்படுத்தும் வகையில் அதற்கு கீழ் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதித்துள்ள கேரள அரசுக்கு முதலமைச்சர் முக. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், இதன் மூலமாக 2 மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பட வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை மேலும் வலுப்படுத்தவும், அணையின் கீழ் பகுதியில் கேரளாவில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பழுதுபார்ப்பு மற்றும் வலுப்படுத்த பணிகளை மேற்கொள்ள தேவையான பொருட்கள் மற்றும் இயந்திரங்களை எடுத்துச் செல்லும் வகையில் வண்டிப்பெரியாறு மற்றும் பெரியாறு அணைப் பகுதிக்கு இடையே உள்ள சாலையை சீரமைக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும், அனுமதி வழங்ககவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |