கேரளாவில் பழங்குடி சமூக மாணவியை இழிவாக பேசியதால் அவர் போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு கேரள அரசு நீதி வழங்க வேண்டும் என்று தேசிய தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நேனோ அறிவியல் துறையில் மேற்படிப்பை முடித்த பழங்குடி வகுப்பை சேர்ந்த தீபா மோகன் என்கின்ற மாணவி கடந்த 2011ஆம் ஆண்டு அதே துறையில் முனைவர் படைப்பில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக பேராசிரியர் நந்தகுமார் என்பவர் மீது அவர் குற்றம் சுமத்தினர். கடந்த சில வாரத்திற்கு முன்பு அந்த மாணவி பல்கலைக்கழகத்தின் வாசலில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பேராசிரியர் நந்தகுமார் ஜாதி பெயரை சொல்லி தன்னை இழிவாக பேசுவதாகவும் முனைவர் படிப்பை முடிக்க விடாமல் தடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த போராட்டத்திற்கு பல அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கேரள அரசு அந்த மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் .தற்போது அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் தாமஸ் தெரிவித்துள்ளார்.