கேரள மாநிலம் பாலக்காட்டில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஆளுநர் தனது அதிகாரத்தில் வரம்பு மீறி செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் துணைவேந்தர்கள் அதிகாரத்தில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பாகும். மேலும் சங்பரிவார் கொள்கைகளின் அடிப்படையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். கேரள பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்திற்கு எதிராக போர் தொடுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் மீதான இந்த தாக்குதல் எந்த நோக்கத்திற்காக இதன் பின் உள்ள அரசியல் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் பல்கலைக்கழக மானிய குல விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டிருப்பதாக கூறி அவரை நியமனத்தை அண்மையில் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதனை தொடர்ந்து கேரளத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்ட முறை கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் சுட்டுறையில் உத்தரவிட்டு இருக்கிறார்.