கேரள தங்க கடத்தல் வழக்கில் உயர் கல்வித்துறை மந்திரி நேரில் ஆஜராக வேண்டுமென சுங்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பார்சல் ஒன்று வந்தது. அதனை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது 14.82 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்த பட்டிருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, அந்த வழக்கில் தொடர்புடைய தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வரை அந்த வழக்கில் 20 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் வருகின்ற ஒன்பதாம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர்கல்வித் துறை மந்திரி கே சுங்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அவருடன் ஸ்வப்னா சுரேஷ் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.