Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு…! பெயிலை ரத்து செய்ய முடியாது… நீதிபதி திட்டவட்டம் …!!

சிவசங்கரியின் பெயிலை ரத்து செய்யக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தூதரகத்தின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்க்கான தங்க கடத்தல் நடத்தப்பட்ட வழக்கில் தகவல் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். மேலும் மூத்த ஐஏஎஸ் அலுவலரும், முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளருமான சிவசங்கரனும் இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கினை சுங்கத் துறை, அமலாக்கத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் சிவசங்கர் கேரள உயர் நீதிமன்றத்தில் பெயில் கேட்டு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கடந்த ஜனவரி 25ஆம் தேதி இவருக்கு பெயில் வழங்கியுள்ளார். பெயிலை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை நீதிமன்ற தீர்ப்பை ஏதிர்த்து வருகிறது. இதன் தொடர்பாக சிவசங்கர் ஆதாரங்களை அழிக்க நேரிடும் என கூறி பெயிலை ரத்து செய்ய அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அசோக் பூஷன் மனுதாரர் மீதான ஆதாரங்கள் இன்னும் கோர்ட்டில் சமர்பிக்க படாத நிலையில் அவரின் பெயிலை ரத்து செய்ய முடியாது. வேண்டுமானால் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை அடுத்த 6 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |