Categories
கன்னியாகுமாரி கொரோனா மாநில செய்திகள்

கேரள – தமிழக எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை…!!

கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

களியக்காவிளையில் உள்ள பிரதான சோதனைச்சாவடி தவிர மற்ற இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை தக்கலை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |