கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம் பெரும் தலைவரான ஆரியதான் முகமது இன்று காலமானார். இவருக்கு வயது 87. இவர் கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் நிலாம்பூர் தொகுதியில் எட்டு முறை எம்எல்ஏவாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கேரள முன்னாள் மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் இவருக்கு உண்டு.
கேரளாவின் பத்தாவது சட்டசபையின் போது காங்கிரஸ் சட்டமன்ற குழு செயலாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவருக்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.