கேரள மக்கள் சாதி, மத, இனம் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து ஓணம் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதியன்று தொடங்கியது. இது வருகிற 23 ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது.
இந்நிலையில் ஓணம் பண்டிகையொட்டி அங்குள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ1000 பரிசுத் தொகையினை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு மற்றும் நலநிதி ஓய்வூதியம் பெறாதவர்களுக்கு கேரள அரசு அறிவித்துள்ள இந்த ஓணம் பரிசுத்தொகை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விநியோகம் செய்யப்படுகிறது.இந்த திட்டத்திற்காக கேரள அரசு ரூ.147 கோடியே 83 லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.