கொரோனா சிகிச்சை எடுத்து வந்தவர் கழுத்தில் புழு அரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் மருத்துவமனையில் அனில்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவமனையில் தொற்று பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட அவர் செப்டம்பர் 26-ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். வீட்டிற்கு வரும் போது உடல் மெலிந்து வயிறு ஒட்டிய நிலையில் அனில்குமார் இருந்துள்ளார்.
அதோடு அவரது கழுத்தில் புழு அரித்த தற்கான அடையாளம் இருந்தது இதனால் கோபம் கொண்ட அவரது மனைவி அனிதா குமாரி மருத்துவமனையின் கவனக்குறைவு மற்றும் அவருக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் சைலஜாவிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கவனக்குறைவாக பணியாற்றிய செவிலியர்கள் லீனா, ரெஜி, மருத்துவர் அருணா ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த உத்தரவை ஏற்க மறுத்த சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து தொற்று பரவும் காலத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அரசு பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தது. ஆனால் இது யாருடைய தவறு என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்று அனில்குமார் மகள் அஞ்சனா கோரிக்கை முன்வைத்துள்ளார்.