Categories
தேசிய செய்திகள்

கேரள மாநிலத்தின் ஆளுநர்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கேரள மாநிலத்தின் ஆளுநர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவருக்கு புதுச்சேரி மாநிலத்தின் கூடுதல் துணை ஆளுநர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழக மாநில பா.ஜ.க கட்சியின் தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையின் கீழ் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கலந்து கொண்ட பா.ஜ.க உறுப்பினர்கள் 4 பேர் வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்தில் நுழைந்தனர்.

தற்போது எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவரை கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்போவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் எச். ராஜா ஆகியோரை டெல்லி மேலிடம் அழைத்துப் பேசியுள்ளது. இதற்கிடையே தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். மேலும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமிக்க போவதாக முன்னதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |