Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வரின் அதிரடி அறிவிப்பு… ஏமாற்றத்தில் ஐயப்ப பக்தர்கள்…!!!!

மலையாள காலண்டரின் படி துலா மாத பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் துலா பூஜைக்காக, இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாளை முதல் வருகிற 21-ஆம் தேதி வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாதாந்திர பூஜையில் பங்கேற்பதற்கு மக்களுக்கு தடை விதிப்பதாக கேரள அரசு திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவில் தற்போது மழை பெய்து வரும் காரணத்தினால் 5 மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதில் பத்தனம்திட்டா மாவட்டமும் ஒன்று. இந்த மாவட்டத்தில்தான் சபரிமலை கோயில் உள்ளது. அங்கு நிலைமை மோசமாக உள்ளதால் இந்த உத்தரவை பிறப்பித்ததாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். இதற்கு முன்பாக ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி இருந்தால், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியான இந்த உத்தரவு சபரிமலை பக்தர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Categories

Tech |