முதல்வரை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் அநாகரிக வார்த்தையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அம்மாநில முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில், இன்றும் நாளையும் 2. 5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்ற மூன்று முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் கேரள முதல்வர் பினராயி விஜயனை அநாகரிக வார்த்தைகளால் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பினராயி விஜயன் ஒரு “கோவிஇடியட்” என்றும், கொரோனா நிபந்தனைகளை தொடர்ந்து மீறும் அவரை குறித்துப் பேச இதைவிட நல்ல வார்த்தை கிடையாது என சர்ச்சையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.