Categories
தேசிய செய்திகள்

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!

கேரளாவில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் பினராயி  விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரை தொடர்ந்து 20 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்த பதவியேற்பு விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

இந்நிலையில் கேரளாவில் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அவரது இலட்சிய உறுதியும் விடாமுயற்சியும் மக்களுக்கு சமூக நீதி, அமைதி மற்றும் செழிப்புக்கு இட்டுச்செல்லும்” என்று வாழ்த்தியுள்ளார்.

Categories

Tech |