கேரளாவில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரிகள் கட்சி 99 தொகுதிகளில் வெற்றியை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் பினராயி விஜயன் இன்று மீண்டும் இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தின் ஆளுநர் ஆரிப் முகமது கான் பினராயி விஜயனுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வரை தொடர்ந்து 20 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முறை முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய கேரளா மாநிலம் என்று புகழ்ந்துள்ள அவர், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை அமைச்சர் பதவியில் அமர்த்தி இருப்பதை தான் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.