Categories
டெக்னாலஜி பல்சுவை

கேலக்ஸி நோட் சீரியஸ் விற்பனையை…. நிரந்தரமாக நிறுத்திய சாம்சங் நிறுவனம்….!!!!

சாம்சங் நிறுவனத்தின் பிரபல ஸ்மார்ட்போன் சீரியஸ் விற்பனை நிரந்தரமாக நிறுத்தப் பட்டது என தகவல் வெளியாகி உள்ளது.

தென் கொரியாவில் இருந்து வெளியாகியிருக்கும் தகவலின்படி, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் சீரியஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை நிரந்தரமாக நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. நோட் சீரியஸ் மாடல்களுக்கு மாற்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போன்கள் மீது கவனம் செலுத்த சாம்சங் முடிவு செய்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

2022-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஸ்மார்ட்போன் உற்பத்தி திட்டத்திலிருந்து கேலக்ஸி நோட் சீரியஸ் நீக்கப்பட்டிருந்தது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது என, தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |