தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே பள்ளி மாணவி வசித்து வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு கிடாரகுளம் பகுதியில் வசிக்கும் சக்திவேல், முத்துக்குமார் ஆகிய வாலிபர்கள் பள்ளி மாணவியை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் முத்துக்குமார், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டு வாலிபர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.