Categories
தேசிய செய்திகள்

கேல் ரத்னா விருது பெறும் மாரியப்பன்… தமிழக முதல்வர் வாழ்த்து…!!!

கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரேசில் நாட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. வருகின்ற 29ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஜனாதிபதி வழங்க இருக்கிறார்.

கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு பலரும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், ” கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டியில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |