Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேள்விக்குறியாக மாறிய சமூக இடைவெளி..? அலை மோதிய மக்கள் கூட்டம்… ஜோராக நடைபெற்ற விற்பனை..!!

சேலம் மாவட்டத்தில் தொற்று காலத்திலும் சனிக்கிழமை வாரசந்தை சிறப்பாக நடைபெற்றுள்ளது

சேலம் மாவட்டத்திலுள்ள கொங்கணாபுரத்தில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வார சந்தைக்கு கொங்கணாபுரம் மற்றும் எடப்பாடியை சுற்றியுள்ள கிராமத்திலிருந்து விவசாயிகள் கோழி மற்றும் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இந்நிலையில் கொங்கணாபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால் ஆடு, கோழிகள் விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து சந்தையில் ஒரு ஆடு 5 ஆயிரத்து 5000 முதல் 7000 வரையிலும், ஒரு கோழி 250 முதல் 1000 வரை விற்பனையாகி உள்ளது. ஆனால் சந்தையில் மக்கள் கூட்டம் அலை மோதியதால் பெரும்பாலானோர் முக கவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக மாறியது. கொரோனா பரவலைத் தடுக்கும் முறையில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |