Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டத்தொடர் கூடும்..கேள்வி கேட்க வாய்ப்பு இல்லை..வெளியான அறிவிப்பு…!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முதன் முறையாக செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா  அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நாடாளுமன்ற இரு சபைகளும் மார்ச் 23ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டன.  

கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டது.  பின்னர் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.  நாடாளுமன்ற கூட்டத் தொடரானது சமூக இடைவெளியுடன் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவம்பர் 18-ல் தொடக்கம்... | Elections News in Tamil

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்துவதற்காக இரு சபைகளிலும் இருக்கைகளும் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டன. செப்டம்பர் 14ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்த அறிவிப்பினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார். இந்த கூட்டத்தொடரில் சீனாவின் ஊடுருவல் முயற்சி மற்றும் வரலாறு காணாத பொருளாதார சரிவு போன்ற பிரச்சினைகளை  எதிர்க்கட்சி எழுப்புவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. 

மக்களவை காலை 9 மணிக்கும் மாநிலங்களவை பிற்பகல் 3 மணிக்கும்  கூடுகிறது.  மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |