Categories
மாநில செய்திகள்

கேள்வித்தாள் முறை மாற்றப்படுமா..? மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில்  தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் நேற்றுமுதல் திறக்கப்பட்டதால் ஆசிரியர்களை பார்த்து மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அடுத்த ஒரு வாரத்திற்கு மாணவர்களின் வருகை கண்காணிக்கப்பட்டு எத்தனை மாணவர்கள் வருகிறார்கள் என்பதை கவனித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  பள்ளி சூழலுக்கேற்ப மாணவர்களை தயார் செய்யும் விதமாக 45 நாட்களுக்கு புத்துணர்வு வகுப்புகள் மற்றும் நடத்தப்படும். மாற்று சான்றிதழ் பெறுவதற்கு கட்டாயம் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என்பதே கிடையாது.

பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டதால் பள்ளி பாடப்புத்தகத்தில் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. எனவே கேள்வித்தாளில் ஏதேனும் மாற்றங்கள் வருமா? என்று சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி எதுவும் இருக்காது வழக்கம்போலவே தான் இருக்கும். கேள்வித்தாளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் மாணவர்களிடம் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே நடைமுறையில் உள்ள கேள்விதாள் முறையே தொடரும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |