தமிழக முதல்வரால் விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எந்த ஒரு பயனுமில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் எதிரொலியாக டெல்லியில் விவசாயிகள் இன்று தொடர்ந்து 10வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. மேலும் மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை கட்டாயம் திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் ஆவேசத்துடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய பாஜக அரசிடம் முதல்வர் வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஊழல் பற்றி விவாதிக்க தயாரா என்று ஆ.ராசா கேட்டு மூன்று நாளாகியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை. தமிழக முதல்வர் விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. மக்களுக்கும் பயன் இல்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.