கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் பிரதமர் ஆத்திரமடைந்து அவர்கள் மேல் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட தால் அங்கு பரபரப்பு நிலவியது.
தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ,ராணுவப் புரட்சிக்கு பின் நாட்டின் பிரதமராக இருப்பவர் பிரயுத் சான் ஓச்சா. 2014ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியில் கிளர்ச்சியை தூண்டிய வழக்கில் ,பிரதமரின் அமைச்சரவையில் இருந்த 3 அமைச்சர்கள் மீது இந்த வழக்கு தொடர்ந்தது. கிளர்ச்சியை எழுப்பிய இந்த 3 மந்திரிகளுக்கும் , ஏழு ஆண்டுகளுக்குப் பின் ,சென்ற வாரம் தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பின்படி 3 பேருக்கு சிறை தண்டனை வழங்கியது. இதனால் பிரதமரின் அமைச்சரவை கூட்டத்தில் 3 பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்நிலையில் தலைநகரான பாங்காக்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமரிடம் காலியிடங்கள் பற்றி, செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ஆத்திரமடைந்த பிரயுத் சான் ஓச்சா ‘இதைப்பற்றி நான் இன்னும் கவனிக்கவில்லை’.’அவ்வளவுதானா இல்லை வேறு கேள்வி இருக்கிறதா’ என்று ஆவேசத்துடன் பேசினார். இதன் பின் கிருமிநாசினி எடுத்துக்கொண்டு, செய்தியாளர்கள் ஒவ்வொருவர் மீது கிருமிநாசினி தெளித்து துள்ளார். இதுமட்டுமல்லாது இதற்கு முன்பாகவும் செய்தியாளர்களின் தலையில் அடிப்பது, காதைத் திருகுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். பிரதமர் இதுபோன்ற செயல்களில் பத்திரிக்கையாளர்களிடம் காட்டுவது முறையற்ற செயல்களாகும் என்று கூறியுள்ளனர் .