Categories
அரசியல் மாநில செய்திகள்

கேள்வி நேரங்களில்…. இதை செய்ய வேண்டாம்…. முதல்வர் போட்ட கண்டிஷன்…!!!

தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் ஏ.வ வேலு பதில் அளித்து பேசினார். அதற்கு முன்னதாக தொடக்கத்தில் பேசிய முதல்வர், இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சட்டப் பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். அப்போது உரை ஆரம்பிக்கும் முன்னதாக ஸ்டாலின் சட்ட முன்வடிவு மற்றும் கேள்வி நேரத்தில் தலைவர்களை புகழ்ந்து பேச வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

நேரத்தின் அருமை கருதி அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கிறேன் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். எப்பொழுதும் சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் தமிழ் உரையை ஆரம்பிப்பதற்கு முன்பாக பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின் என வரிசையாக பாராட்டுவது வழக்கமாக கொண்டிருந்ததால் இந்த  புகழ்ச்சி முறையை கேள்வி நேரங்களில் பயன்படுத்துவதால் நேரம் வீண் அடிக்கப்படுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

Categories

Tech |