கேழ்வரகு களியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நம் முன்னோர்கள் காலத்தில் சிறுதானிய உணவுகளை அவர்கள் அதிகமாக சாப்பிட்டு வந்தார்கள். அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்நாளையும் நீடித்தது. சிறுதானிய உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருப்பதால் அதை நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக கேழ்வரகில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கேழ்வரகு களியில் கால்சியம் மிக அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஏற்ற உணவு இது. வைட்டமின் தாது உப்புக்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும். கேழ்வரகு பசியை குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் வெப்பத்தை தணிக்கும். கோடையில் காலை அல்லது மதிய உணவாக அனைவரும் உட்கொள்ளலாம்.