Categories
அரசியல் மாநில செய்திகள்

கேஷ்ஷா….? இல்ல செக்கா….? “ரூ1,00,000 கேட்டு” அமைச்சரை டார்ச்சர் செய்யும் நெட்டிசன்கள்….!!

தமிழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த பரிசுத்தொகையை கேஸாக தருவீர்களா அல்லது செக்காக தருவீர்களா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மேலும் அதிமுக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் புகார் அளித்தார். இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் திமுகவுக்கு, அதிமுக தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருக்கிறது என்று காண்பித்தால் ஒரு லட்சம் பரிசு தருகிறேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் இல்லத்தரசிகள் அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்ஸி மற்றும் கிரைண்டரை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி எந்த ஒரு வீட்டிலும் கிடையாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இதனையடுத்து கலைஞர் கொடுத்த டிவி யை பயன்படுத்தி வரும் சிலர் டிவி நன்றாக ஓடுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அந்தப் புகைப்படங்கள் அனைத்தையும் சேமித்து, அமைச்சர் ஜெயக்குமார் கூறிய புகைப்படத்தையும் சேமித்து மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  அதில் எங்கள் வீட்டில் கலைஞர் டிவி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது, நீங்கள் அறிவித்த பரிசுத் தொகையை கேஷா தருவீர்களா செக்காக தருவீர்களா என சிறுத்தை படம் பாணியில் சந்தானம் கலாய்ப்பது போல மீம்ஸ் தயாரித்து வெளியிட்டு வருகிறார்கள். இது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |