Categories
தேசிய செய்திகள்

கேஸ் கசிந்து தீ விபத்து…. 3 பேர் பலி…. டெல்லியில் சோகம்….!!!

டெல்லியில் சமையல் கியாஸ் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஆனந்த் பாரட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருபவர் சுசீலா. இவருக்கு ஏழு வயதான மான்சி மற்றும் மோகன் என்ற இரு குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று வீட்டில் உள்ள சமையல் கேஸ் எதிர்பாராதவிதமாக கசிய தொடங்கியுள்ளது. இதனால் உடனே அங்கு தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் சுசீலா மற்றும் குழந்தைகள் உட்பட 3 பேரும் சிக்கியுள்ளனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மூவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் துணை கமிஷனர் ஸ்வேதா சவுகான் கூறியுள்ளார்.

Categories

Tech |