மனைவி இறந்த துக்கத்தில் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு ஒப்பந்த பணியாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி சக்தி ரோட்டில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பரிமளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 7-ஆம் தேதி ஒரு சாலை விபத்தில் பரிமளா உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் மன உளைச்சலில் இருந்த சங்கர் தனது வீட்டில் இருக்கும் சமையல் கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார்.
இதனை அடுத்து சங்கரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.