ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை நேற்று தொடங்கியது.அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட்டது. சென்னையில் முதன்முறையாக இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும்,ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டும்.
அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகையை மட்டும் கொடுத்து சிலிண்டரை வாடிக்கையாளர்கள் நிரப்பி கொள்ளலாம். அதாவது சென்னையில் இந்த மாதம் இரண்டு கிலோ சமையல் எரிவாயு 250 ரூபாய்க்கும் ஐந்து கிலோ 575 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர்கள் விற்பனையை கூட்டுறவு துறை தொடங்கி வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த கேஸ் சிலிண்டர்கள் இணைப்பைப் பெற முகவரி சான்று தேவையில்லை.ஏதேனும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை மட்டும் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது.மேலும் கூட்டுறவு அங்காளிகளில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் விரைவில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.